தமிழன் கால் பதிக்காத இடம் இப்புவியில் இல்லை என்ற இன்றைய நிலையில் பரந்துப்பட்ட இந்த நிலப்பரப்பில் எங்கும் பரவிக்கிடக்கும் தமிழர்களாகிய நாம் இன்று சில வரலாற்று கடமைகளை முன்னெடுக்கும் காலகட்டத்தில் இருக்கின்றோம். சமீப காலமாக கருத்தாடலும், செயற்பாடுகளும் அதிகரித்துக்கொண்டு வருகிறது. சிலர் சில ஆய்வுகளை வெளியிடுவதும் அதனை ஆதரித்து அல்லது ஆமோதித்து பலர் கருத்துகளை பகற்வதும் என்று சிறப்பாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அடிக்கடி ஏதோ இந்திய - பாக்கித்தான் அணிகளுக்கிடையேயான மட்டையாட்டத்தொடர் நடைபெறுவது போல் விடுதலை புலிகள் சிங்கள படையினை தாக்கி பாரிய இழப்பை ஏற்படுத்தினால் ஆரவாரிப்பதும், சிங்கள படை விடுதலை புலிகளைதாக்கி பாரிய இழப்பை ஏற்படுத்தினாலும், பொதுமக்கள் மீது குண்டுமாரிப் பொழிகின்றபோதும், தமது உள்ளக் குமுறல்களையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தி கட்டுரை வடித்து, கதைப்பதிலும் சென்று கொண்டிருக்கின்றோம். அன்று துண்டறிக்கைகள், இதழ்கள், செய்திதாள்கள் மூலம் வெளிப்படுத்திய உணர்வினை இன்று இணைய ஊடகங்களிலும் வெளிப்படுத்தி கொண்டிருக்கின்றோம். வளர்ந்து விட்ட அறிவியல் தொழில் நுட்பத்தின் ஊடாக நமது உள்ளக்குமுறலை மட்டுமே அதிக அளவில் வெளியிட்டு கொண்டிருக்கின்றோம். மூன்றாம் கட்ட ஈழப்போரின் முடிவிலேயே விடுதலை புலிகள் தங்கள் படையை பலப்படுத்துவதோடு, சமூக-அரசியல் கட்டுமானத்தை முன்னெடுப்பதில் முனைப்பு காட்டி இன்று நான்காம் கட்ட ஈழப்போரின் தொடக்கத்தில் சர்வதேச விழிகளின் முன்பு தமது சிறந்த படை பலத்தோடு மட்டுமல்லாமல், சிறந்த சமூக-அரசியல் கட்டுமான பலத்தோடு நின்று கொண்டிருக்கின்றார்கள். தாக்குதல் நடத்தி ஒரு இடத்தை பிடிப்பதோடு மட்டுமல்லாமல் அவ்விடத்தில் சமூக-அரசியல் கட்டுமானத்தையும் முன்னெடுக்கும் போது மட்டுமே நாம் உண்மையான விடுதலைப் போரில் வெற்றி ஈட்ட முடியும். தமிழ் மக்களால், தமிழ் மக்களுக்காக கட்டப்பட்ட விடுதலை புலிப்படை தமிழ் மக்களின் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு ஒரு சமூக-அரசியல் கட்டுமானமாக உருவாக தொடங்கிவிட்டது. எல்லாவற்றினையும் விடுதலை புலிகளே செய்வர் என்று பாராமல், இவ்விடுதலைப் போராட்டத்தை வீறுகொண்டெடுக்க முனைவது சர்வதேச தமிழர்களாகிய நம் முன் நிற்கின்ற தலையாய கடமையாகும். புலத்தில் உள்ள ஒவ்வொறு தமிழனும் இன்று உலகம் மெச்சக்கூடிய சாதனைகளை புரிந்து கொண்டிருக்கின்றான். அச்சாதனையின் பலனை தாய்நாட்டின் அடிப்படை சமூக-அரசியல் கட்டுமானத்திற்கு நாம் பயன்படுத்த அணியமாக இருக்க வேண்டிய சூழலில் இருக்கின்றோம். எவரும் வந்து உதவி செய்து பெறக்கூடியதல்ல விடுதலைப் போராட்டம், நமக்காக நாமே போராடி பெற வேண்டும். யாழ் கோட்டையிலும் திருகோணமலையிலும் என்று புலிக்கொடி பறக்க விடப்படுகின்றதோ அன்று தமிழீழ குடியரசு மலரும் அதனை விடுதலை புலிகள் பார்த்துக் கொள்வார்கள். நாம் உருவாகும் தமிழீழ குடியரசின் அடிப்படை சமூக-அரசியல் கட்டுமானங்களை நிறைவு செய்து வளர்த்தெடுக்க வேண்டிய தலையாய கடமையில் இருக்கின்றோம். பெறும்பாலும் கவிதை, கட்டுரை, ஆய்வுகள், செய்திகள் கொண்ட இணைய தளம் வாயிலாக நமது உணர்வினையும் உள்ளக்குமுறல்களையும் வெளிப்படுத்தி ஊடகம் ஊடகம் என்று ஊதிக்கொண்டிருக்கின்றோம். எதிரி எவ்வளவு பேர் வீழ்ந்தான், நம்மவர்கள் எவ்வளவு பேர் வீழ்ந்தார்கள் என்று பலியானவர்கள் காயமடைந்தவர்கள் என புள்ளி விவரங்களை கணக்கெடுப்பதை விடுத்து உருவாகும் தமிழீழ குடியரசின் அடிப்படை தேவைகளை நம்மால் எவ்வளவுக்கு நிறைவு செய்ய முடியும் என்ற கோணத்தில் ஒரு புதிய வரலாற்று கடமையினை ஆற்ற வேண்டிய சூழலில் இருக்கின்றோம். புலத்தில் உள்ள ஒவ்வொரு தமிழனும் வெவ்வேரு துறையைச் சார்ந்தவர்களாக இருப்பர், அத்துறையில் வல்லுநர்களாகவும் இருப்பர். ஆதலால் தத்தமது துறைகளைப்பற்றிய புதிய ஆக்கங்களையும், ஆய்வுகளையும், தொகுப்புகளையும், அறிவியல் தொழில் நுட்பங்களையும் உருவாகும் தமிழீழ அரசிற்கு சமர்பிக்க அணியமாகுவோம். நம்மால் முடிந்தளவு ஆக்கபூர்வமாக முன்னெடுப்பதோடு மட்டுமல்லாமல் நம்மை சுற்றியுள்ளவர்களையும் ஈடுபடுத்தி ஒரு புதிய சூழலை உருவாக்குவோம். "விடுதலை புலிகள் ஏவுகனை கிபீரை வீழ்த்தியதா" என்பதோடல்லாமல் கிபீரை வீழ்த்த என்ன செய்யலாம், புதிய ஏவுகனை வாங்கி கிபீரை வீழ்த்த விடுதலை புலிகளுக்கு பொருளாதார உதவி செய்ய முடியுமா? அல்லது விடுதலை புலிகளே ஏவுகனை வடிவமைக்க தொழில் நுட்ப உதவி செய்ய முடியுமா? என்று நமது ஆய்வினை மேற்கொண்டோமானால் கிபீரை மட்டுமல்ல சிங்கள படையினையும் தூள்தூளாக்க முடியும். இதுவே தற்போது நாம் செய்ய வேண்டிய தலையாய கடமையாகும். இது விடுதலை புலிகளுக்கு தார்மீக பலமாக மட்டுமல்ல தாங்கும் பாலமாகவும் அமையும்.
வாழ்க தமிழ்...! வெல்க தமிழீழஅரசு...!
"புரட்சியாளர்கள் என்றும் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள்"